Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

27ஆண்­டு­க­ளாக கிட்­டாத நீதி – இனி அரசை நம்­பிப் பய­னில்லை

August 22, 2017
in News
0

கைது செய்­யப்­பட்டு பின்­னர் காணா­மல் ஆக்­கப்­பட்­ட­மைக்கு இலங்கை நீதிப் பொறி­முறை ஊடாக 27 ஆண்­டு­கள் கடந்­தும் எந்த நீதி­யும் கிடைக்க ­வில்லை. நாம் பன்­னாட்டு நீதிப்­பொ­றி­ மு­றையே அவ­சி­யம் என்று வேண்­டு­கின்­றோம்.

மட்­டக்­க­ளப்பு சித்­தாண்டி முரு­கன் ஆலய முன்­ற­லில் கைதின்­பின்­னர் காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் குடும்ப உற­வு­கள் மேற்­படி கோரிக்­கையை முன்­வைத்­துள்­ளன.

இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி பொதுச் செய­லரும் கிழக்கு மாகாண விவ­சாய அமைச்­ச­ரு­மான கி.துரை­ரா­ஜ­சிங்­கத்துக்கு நேற்று அனுப்பி வைக்­கப்­பட்­டுள்ள மனு­விலே மேற்­கண்­ட­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது:

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­தின் சித்­தாண்டி மற்­றும் அதனை அண்­டிய பிர­தே­சங்­க­ளில் 1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதக் காலப் பகு­தி­க­ளில் இடம்­பெற்ற கொடூ­ர­மான போர், இரா­ணு­வத்­தின் அடக்­கு­ மு­றை­கள், தொடர்ச்­சி­யான சுற்­றி­வ­ளைப்­புக்­கள் நடந்து கொண்­டி­ருந்த வேளை­யில் ஆயி­ரக்­க­ணக்­கான பொது மக்­கள் பயந்து, ஒளிந்து பாது­காப்­பற்ற சூழ­லில் இருந்­த­னர்.

பன்­னாட்­டுச் செஞ்­சி­லு­வைச் சங்­கம், சித்­தாண்டி சிறி சித்தி வேலா­யுத சுவாமி ஆல­யத்தை நலன்­புரி முகா­மாக அறி­வித்து அங்கு அடைக்­க­லம் அடை­யச் செய்­தது.

இலங்கை இரா­ணு­வத்­தி­னர் முகா­மில் அடைக்­க­லம் தேடி­வந்­தி­ருந்த இளை­ஞர்­கள், மாண­வர்­கள், வறு­மை­யான கூலித் தொழி­லா­ளர்­க­ளை­யும் மூன்று சுற்­றி­வ­ளைப்பு நட­வ­டிக்­கை­யின் மூலம் 62 பேரைக் கைது செய்து வாக­னங்­க­ளில் ஏற்­றிச் சென்­ற­னர்.

கைது செய்­யப்­பட்ட அனை­வ­ரும் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­தில் முறக்­கொட் டான்­சேனை இரா­ணுவ முகா­முக்கு கொண்டு செல்­லப்­பட்­ட­னர். 27 ஆண்­டு­க­ளாக அதன் பின்­னர் என்­ன­வென்று தெரி­யாத நில­மை­யி­லேயே உள்­ளது.

வலிந்து காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­கள், தமது உயிர் வா­ழும் உரிமை உட்­பட அனைத்து உரி­மை­க­ளை­யும் இழந்­துள்­ள­னர். எங்கே என்ன நிலை­யில் இருக்­கி­றார்­கள்? இருக்­கி­றார்­களா, இல்­லையா என்­பதை அறிய நாம் துடித்­துக் கொண்­டி­ருக்­கின்­றோம்.

காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் குடும்ப உற­வு­க­ளா­கிய நாம் அச்­சு­றுத்­தப்­ப­டு­வ­தா­னது உண்­மை­யைக் கண்­ட­றி­வ­தற்­கும் நீதியை நிலை­நாட்­டு­வ­தற்­கும் எதி­ராக மேற்­கொள்­ளப்­ப­டும் நட­வ­டிக்­கை­யா­கும். இது சாட்­சி­க­ளுக்­குப் பாது­காப்பு கிடை­யாது என்­ப­தை­யும் உறு­திப்­ப­டுத்­து­கி­றது. நிலை­மா­று­கால நீதி­யின் நியா­யா­திக்­கத்­தைக் கேள்­விக்­குள்­ளாக்­கு­கி­றது.

இலங்கை அரசு அர­சி­யல் இய­லா­மை­யி­லும் நல்­லி­ணக்­கம் சார்ந்து நேர்­மை­யான எண்­ணப்­பாடு இல்­லா­ம­லும் இருப்­ப­தா­க­வே காண்­கி­றோம். வடக்கு – கிழக்கு மக்­க­ளுக்கு நீதியை வழங்­கவோ சமா­தா­ன­மான வாழ்வை உரு­வாக்­கவோ இய­லாத நிலை­யி­லேயே இலங்கை அர­சுள்­ளது.

எமது பிர­தே­சத்­தில கைதின்­பின் வலிந்து காணா­மல் ஆக்­கப்­பட்­ட­மைக்கு இலங்கை நீதிப் பொறி முறை ஊடாக 27 வரு­டங்­கள் கடந்­தும் எந்த நீதி­யும் கிடைக்­கப் பெறாத நிலை­யில் நாம் பன்­னாட்டு நீதிப்­பொ­றி­மு­றையே அவ­சி­யம் என்று வேண்­டு­கின்­றோம்.

வலிந்து காணா­மல் ஆக்­கப்­பட்ட குடும்ப உற­வு­க­ளுக்­கும் ஏனைய சாட்­சி­க­ளுக்­கும் இந்த விட­யம் சார்ந்து செயற்­ப­டும் மனித உரி­மைப் பாது­கா­வ­லர்­க­ளுக்­கும் உரிய பாது­காப்பு உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்­டும்.

நிலை­மா­று­கால நீதி முன்­னெ­டுப்­பு­கள் நேர்­மை­யான முறை­யில் முன்­னெ­டுக்­கப்­பட அரச வன்­மு­றைப் பொறி­மு­றை­கள் கட்­டுப்­ப­டுத்­தப்­பட வேண்­டும்.

இவை­யா­வை­யும் முறையே நடை­பெ­ற­வும் உண்­மை­யான நல்­லி­ணக்­கம் ஏற்­ப­ட­வும் வேண்­டு­மா­யின் ஐ.நா. இலங்கை நிலை­மா­று­கால நீதி முன்­னெ­டுப் பு­க­ளில் இணைப் பங்­கா­ளி­யாக வேண்­டும் – என்று அந்த மனு­வில் குறிப்­பி­டப்­பட்­டுள் ளது.

Previous Post

பல்சுவை கலைவிழா -2017

Next Post

சுகா­தார அமைச்­சர் இன்­றியே வடக்கு அமைச்­ச­ரவை இன்று

Next Post
சுகா­தார அமைச்­சர் இன்­றியே வடக்கு அமைச்­ச­ரவை இன்று

சுகா­தார அமைச்­சர் இன்­றியே வடக்கு அமைச்­ச­ரவை இன்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures