இலங்கையில் 26 வருடங்களின் பின்னர் உயிரிழந்த தாயின் சடலத்தை பெற்றுக்கொள்ள மகன் ஒருவர் வந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.சிறு வயதில் விட்டு சென்ற மகன் ஒருவர் 26 வருடங்களின் பின்னர் தாயின் சடலத்தை பெற்றுக் கொள்ள நிக்கவரெட்டிய வைத்தியசாலைக்கு வந்துள்ளார்.
நிக்கவரெட்டிய வைத்தியசாலையில் உயிரிழந்த 55 வயதான எஸ்.எம்.பண்டார மெனிகா என்ற தாயின் மரண விசாரணையின் பின்னர் இந்த செய்தி வெளியாகியுள்ளது.
வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்த மகன் உயிரிழந்துள்ள தாய் தொடர்பில் தனக்கு நினைவில்லை எனவும், தன்னை வளர்த்த தாய் அவுலேகம பிரதேசத்தில் வாழ்வதாக மகன் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் சகோதரி சாட்சி வழங்கும் போதே உண்மை தகவல் வெளியாகியுள்ளது.
அவரது சாட்சிக்கமைய, உயிரிழந்திருப்பது எனது சகோதரி ஆகும், அவர் 30 வருடங்களுக்கு முன்னர் நிக்கவரரெட்டிய பிரதேசத்தில் திருமணம் செய்து கொண்டார். திருமண வாழ்க்கையில் அவருக்கு ஆண் மற்றும் பெண் குழந்தை பிறந்தது. எனினும் அவரது கணவர் மற்றும் மகன் தாயை கைவிட்டு சென்றுள்ளனர். அதன் பின்னர் தனது மகளுடன் இன்னும் ஒருவரை சகோதரி திருமணம் செய்து கொண்டுள்ளார்.
தங்தையின் முதல் கணவர் தனது 3 வயது மகனை நீர் வற்றிய கிணற்றில் விட்டு சென்றுள்ளார். அவரை வேறு ஒரு பெண் எடுத்து வளர்த்தார். அந்த குடும்பத்திற்கு என்ன நடந்ததென தெரியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் உயிரிழந்த பெண்ணின் மகன் யார் என்பது தொடர்பில் உறுதியாகியுள்ளது.