வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சினால் திருக்கோவில் சங்கமன் கிராமத்தில் ரூபா 1 கோடி 50 இலட்சம் ரூபா நிதியில் அமைக்கப்பட்ட 25 வீடுகள் கையளிக்கும் நிகழ்வு நேற்று திருக்கோவில் சங்கமன் கிராமத்தில் இடம்பெற்றது.
அம்பாறை மாவட்ட செயலர் துசித பீ.வணிகசிங்க தலைமையில் இடம்பெற்றது
இந்நிகழ்வுக்கு வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் சஜித் பிரேமதாச முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு இந்த வீடுகளை பயனாளிகளிடம் கையளித்து வைத்தார்.
போரினால் பாதிக்கப்பட்ட மற்றும் மிக வறிய குடும்பங்களுக்கே இவை வழங்கி வைக்கப்பட்டது. இதன்போது குறித்த 25 வீட்டு உரிமையாளர்களுக்கு தலா 1 இலட்சம் ரூபா வீதம் 25 இலட்சம் ரூபாவுக்கான காசோலைகளும் வழங்கி வைக்கப்பட்டது.
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நெளபர் ஏ.பாவாவினால் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் அமைச்சர் தயா கமகே, நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்