நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 25 ஆயிரத்து 31 பேர் இதுவரையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் குறித்த நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் காலப்பகுதியில் 6 ஆயிரத்து 500 இற்கும் மேற்பட்ட வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

