குறித்த 225 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பி. சி.ஆர் பரிசோதனைகளில் கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
முப்படையினரால் நடாத்திச் செல்லப்படும் இந்த தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து இதுவரையான காலப்பகுதியில் 14 ஆயிரத்து 735 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்துள்ளனர்.
வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த நிலையில் நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட இலங்கை பிரஜைகள் பலர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

