Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

210 யாத்திரிகர்கள் வடக்கு மையங்களில் தனிமைப்படுத்தல்

March 22, 2020
in News, Politics, World
0

கொரோனா வைரஸ் ஆபத்தையடுத்து இந்தியாவுக்கு யாத்திரை மேற்கொண்ட 210 இலங்கைப் பிரஜைகள் நேற்று நாடு திரும்பினர்.

நாடு திரும்பிய அனைத்து யாத்திரிகர்களும் தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 170 பேர் இரணைமடு இராணுவத்தளத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்திக்  கண்காணிக்கும் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அதேவேளை, முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு விமானப்படைத் தளத்தில் 40 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.

இவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கண்காணிக்கப்படுவார்கள் எனவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இதுவரை வௌிநாடுகளில் இருந்து வருகை தந்த மூவாயிரத்துக்கும் அதிகமானவர்கள் 22 தனிமைப்படுத்திக்  கண்காணிக்கும் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Previous Post

120 கிலோ கேரளக் கஞ்சா சிக்கியது

Next Post

தொற்றுள்ளோருடன் தொடர்புவைத்திருந்த 11,482 பேர் அடையாளம்

Next Post

தொற்றுள்ளோருடன் தொடர்புவைத்திருந்த 11,482 பேர் அடையாளம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures