இலங்கை இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டுப் பாலியல் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட கிருஷாந்தி குமாரசாமியின் 21 ஆம் ஆண்டு நினைவேந்தல் செம்மணியில் நாளைமறு தினம் இடம்பெறவுள்ளது.
மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் காலை 8 மணிக்கு இந்த நினை வேந்தல் நடைபெறவுள்ளது.
1996 ஆம் ஆண்டு இதே மாதம் 7 ஆம் திகதி, ஜி.சி.ஈ. உயர் தரப் பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிக் கொண்டி ருந்த மாணவி கிருஷாந்தி குமாரசாமி நாவற்குழியில் சிப்பாய்களால் மறிக்கப்பட்ட பின்னர் காணாமற்போனோர். அவரைத் தேடிச் சென்ற அவரது தாய் குமாரசாமி இராசம்மாள், சகோதரன் -பிரணவன் குமாரசாமி மற்றும் அயல் வீட்டார் கிருஷ்ணமூர்த்தி ஆகிய 4 பேரும்கூடக் காணாமற்போயினர்.
விசாரணைகளின் பின்னர் அவர்கள் அனைவரும் கொன்று செம்மணியில் புதைக்கப்பட்டனர் என்பது தெரியவந்தது. இராணுவச் சிப்பாபாய்கள் சிலர் கைது செய்யப்பட்டு வழக்கு நடத்தப்பட்டது.
சோமரத்ன ராஜபக்ச என்கிற சிப்பாய்க்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அவரே செம்மணிப் புதைகுழிகள் தொடர்பான தகவல்களைப் பின்னர் வெளியிட்டார். அவர் அடையாளம் காட்டிய இடங்களில் இருந்து 15 மனித எச்சங்கள் மீட்கப்பட்டன. எனினும் பின்னர் அந்த வழக்குக்கு என்ன நடந்தது என்பதே தெரியாமல் அது கிடப்பில் போடப்பட்டது.