2017 ஆம் ஆண்டிற்கான கூட்டுப் படை பயிற்சி நடவடிக்கை 8வது தடவை ஆரம்பமாகின்றது. வெளிநாட்டு இராணுவ அங்கத்தவர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் 62 பேர் உட்பட இலங்கை முப்படையினர் 2675 பேருடன் இராணுவ பயிற்சிகள் “கூட்டுப் படை பயிற்சி அப்பியாசம்’ 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது இலங்கை இராணுவம் பெற்றுக் கொண்ட அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் நோக்கத்துடனும் சகோதரத்துவ சேவையை அன்னிய ஒன்னிய படுத்தும் நோக்கத்துடனும் இந்த கூட்டுப் படைப் பயிற்சிகள் 2010ஆம் ஆண்டு இராணுவத்தினரால் அறிமுகம் செய்யப்பட்டதுடன் 8வது தடவையாக இம்முறை இடம்பெறுகின்றது.

