இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சங்கத்துடன் இணைந்து ஸ்ரீலங்கன் ஸ்போர்ட்ஸ் ரிவி நடத்தும் 20 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான கால்பந்தாட்டத்தில் நான்காவதும் கடைசியுமான கால் இறுதிப் போட்டியில் ஹமீத் அல் ஹசெய்னி கல்லூரி அணியை தாருஸ்ஸலாம் கல்லூரி அணி எதிர்த்தாடவுள்ளது.
இப் போட்டி கொம்பனித் தெரு சிட்டி லீக் மைதானத்தில் இன்று பிறப்கல் 4.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான கால் இறுதிப் போட்டி மற்றைய கால் இறுதிப் போட்டிகளை விட பரபரப்பரப்பாகவும் விறுவிறுப்பாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டி குழுவில் இடம்பெற்ற ஹமீத் அல் ஹுசெய்னி கல்லூரி அணி தோல்வி அடையாத அணியாக கால் இறுதிக்கு முன்னேறியுள்ளது.
இக் குழுவில் அல் பலாஹ் கல்லூரி அணி 5 – 0 என்ற கோல்கள் வித்தியாசத்திலும் மாவனெல்லை பதூரியா கல்லூரி அணியை 3 – 0 என்ற கோல்கள் வித்தியாசத்திலும் இலகுவாக வெற்றிகொண்டிருந்தது.
ஆனால், கிளிநொச்சி வட்டக்கச்சி மத்திய கல்லூரி அணியுடனான போட்டியில் கடும் சவாலை எதிர்கொண்ட ஹமீத் அல் ஹுசெய்னி கல்லூரி அணி அப் போட்டியை 1 – 1 என வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டது.
ஏ குழுவில் இடம்பெற்ற தாருஸ்ஸலாம் கல்லூரி அணி தனது முதலாவது போட்டியில் ஸாஹிரா கல்லூரி அணிக்கு பலத்த சவாலாக விளங்கிய போதிலும் இறுதியில் 1 – 2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
கிங்ஸ்வூட் கல்லூரி அணியுடனான இரண்டாவது போட்டியில் கடும் முயற்சிக்குப் பின்னர் 4 – 3 என தாருஸ்ஸலாம் கல்லூரி அணி வெற்றிகொண்டது.
கடைசிப் போட்டியில் கம்பளை ஸாஹிரா கல்லூரி அணியை 5 – 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றிகொண்டது.
இந்த இரண்டு அணிகளிலும் திறமையான வீரர்கள் இடம்பெறுவதால் இந்தப் போட்டியில் கோல் மழை பொழியப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணிகள்
ஹமீத் அல் ஹுசெய்னி கல்லூரி: எம். பஸ்லான், ஏ. ஸக்கி, எம். ரியாஸ், எம். முர்ஷித், அப்துல் ரஹுமான், எம். மஸியாத், ஆர். அத்தீக், எப். அப்துல்லா, எம். அர்ஹம், எஸ்.எம். ஹுசெய்ன், எஸ்.எம். ஹசன், எம். பஸாம், எம். அக்கீல், எம். யாசிர், எம். இப்ராஹிம், அப்துல் ரஹீம், எம். சய்த், எம். ரிஷாத், எம். ரிப்கான், எம். ஆக்கிப், ஆதில் மொஹமத், எம். சாலிப், எம். ரிஹாஸ். பயிற்றுநர்: பஸுல் ரஹ்மான்.
தாருஸ்ஸலாம் கல்லூரி: எச். தய்ஹா, எம். பராத், எம். அஸாம், எம். முசிஹக்கீம், எம். ஆஷிப், எம். யசீர், எவ். முஹாத், எம். ரிப்லான், ரினாஸ் அஹமத், ஏ ரஹ்மான், எம். இப்ராஹிம், இஸட். ஸதீன், ஏ. சமாத், ஆர். ஹுமைத், எவ். உமர், எம். அக்கீல், எம். முய்ஸ், அக்கீல் அஹமத், எம். முஹம்மத், எம். ரிம்ஸான், அப்துல் ஷஹீத், ஷாஸான் அஹ்மத். பயிற்றுநர்: என். ஜயரத்ன.

