நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டுவரப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் ஆராய்ந்து தீர்மானம் ஒன்றை எடுப்பதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்றிரவு (07) நடைபெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் நேற்றிரவு விரிவாக ஆராயப்பட்டுள்ளதுடன், இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என பெரும்பாலானவர்கள் கருத்துத் தெரிவித்திருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் இவ்வாரம் முதலே முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் இதன்போது முடிவு