Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

2 மாதங்களுக்கு முன் காணாமல்போன பெண் ஊடகவியலாளரின் தலை, கால் கடலில் மீட்பு

October 8, 2017
in News, Politics, World
0
2 மாதங்களுக்கு முன் காணாமல்போன பெண் ஊடகவியலாளரின் தலை, கால் கடலில் மீட்பு

இரண்டு மாதங்களுக்கு முன்னர் காணாமல்போன பெண் ஊடகவியலாளரின் தலை கடலில் இருந்து மீட்கப்பட்ட சம்பவமொன்று டென்மார்கில் இடம்பெற்றுள்ளது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் சுவீடன் நாட்டைச் சேர்ந்த கிம் வால் எனும் பெண் ஊடகவியலாளர் நீர் மூழ்கிக் கப்பலில் ஆழ்கடல் பயணம் மேற்கொண்டபோது காணாமல்போயிருந்தார். இந்நிலையில் குறித்த பெண் ஊடகவியலாளரின் தலை தற்போது கடலுக்கடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக டென்மார்க் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் டென்மார்க் பொலிஸார் தெரிவிக்கையில்

பெண் ஊடகவியலாளரின் தலை ஒரு பையில் இருந்தது. அதே பையில் இரண்டு கால்களும் இருந்துள்ளன. அவரின் ஆடைகளைக் கொண்டுள்ள மற்றுமொரு பையும் கடலுக்கடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பீட்டர் மேட்சனுக்குச் சொந்தமான நீர்மூழ்கிக் கப்பலில், பீட்டரின் கடல் சாகசங்களைப் பற்றிய நூல் ஒன்றை எழுதுவதற்காக, கடந்த ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி பயணத்தை ஆரம்பித்திருந்தார் பெண் ஊடகவியலாளர். இந்நிலையில், 11 நாள்கள் கழித்து தலை மற்றும் கால்களற்ற அவரது உடல், டென்மார்கின் கோபென்ஹெகன் கடற்கரையில் இருந்து மீட்கப்பட்டிருந்தது.

கிம் வாலைக் கொலை செய்து, அவரின் உடலைச் சிதைத்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பீட்டர் தற்போது கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார். கோபென்ஹேகன் அருகே உள்ள கடல் பகுதியில் பல தடவைகள் சுழியோடிகள் தேடுதல்களை மேற்கொண்ட நிலையிலேயே இவ்வாறு பைகள் மீட்கப்பட்டுள்ளன. அவை மேலே மிதந்து வராமல் இருக்க கனம் மிகுந்த உலோகத் துண்டுகளுடன் கட்டி கடலுக்குள் வீசப்பட்டிருந்தது. அந்தத் தலையில் காயங்கள் எதுவும் இல்லை என்றும், அது கிம் வாலின் தலைதான் என்று தடயவியல் பல்மருத்துவர் உறுதிப்படுத்தியுள்ளார் . கிம் வாலின் விலா எலும்பு மற்றும் பிறப்பு உறுப்பில் அவரது மரணம் நிகழ்ந்த சமயம் அல்லது மரணத்திற்கு சற்று கழித்து கத்தியால் ஏற்படுத்தப்பட்ட காயங்கள் இருப்பது பிரேதப் பரிசோதனையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 21 ஆம் திகதி அவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் இருந்து ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் கடலுக்குள் தற்போது தலையும், காலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவர் இறந்ததற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஒரு பெண்ணின் தலை வெட்டப்படும் காணொளியொன்று, பீட்டருக்கு சொந்தமானது என்று சந்தேகிக்கப்படும் ஹார்ட் டிரைவ் ஒன்று கிடைத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கோபென்ஹேகன் கடற்கரையில் கிம் வாலை இறக்கி விட்டதாக முதலில் தெரிவித்த பீட்டர், பின்னர் தன்னுடன் கப்பலில் இருந்தபோது தலையில் ஏற்பட்ட ஒரு காயத்தால் அவர் இறந்துவிட்டதால், கடலுக்குள்ளேயே அவரைப் புதைத்துவிட்டதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

10 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல்

Next Post

கிழக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தனித்து ஆட்சி அமைக்க வேண்டும் – பிரசன்னா

Next Post
கிழக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தனித்து ஆட்சி அமைக்க வேண்டும் – பிரசன்னா

கிழக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தனித்து ஆட்சி அமைக்க வேண்டும் – பிரசன்னா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

மின்சாரம் மற்றும் எரிபொருள் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம் : ஐ.எம்.எப்பிற்கு அநுர அறிவிப்பு

May 31, 2026
நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘கான் சிட்டி’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘கான் சிட்டி’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

May 31, 2026
18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

May 30, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

பொதுமக்களே, எச்சரிக்கை! – இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகள்!

May 30, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures