Friday, August 29, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

17 வரு­டங்­க­ளின் பின்னர் இந்­திய சிப்­பாய்­க­ளுக்கு கோப்பாயில் அஞ்­சலி

August 17, 2017
in News, Politics
0

இந்த வார இறு­தி­யில் இலங்கை வரும் இந்­திய இரா­ணுவ உயர் அதி­கா­ரி­கள் குழு ஒன்று யாழ்ப்­பா­ணத்­தில் கொல்­லப்­பட்ட தமது சகாக்­க­ளுக்கு அஞ்­சலி செலுத்த உள்­ள­து. இதற்­காக, 17 ஆண்­டு­க­ளா­கக் கைவி­டப்­பட்­டுக் கிடந்த நினை­வி­டம் தேடிப் பிடித்­துத் துப்­பு­ரவு செய்­யப்­ப­டு­கின்­றது.

விடு­த­லைப் புலி­க­ளின் தாக்­கு­த­லில் கல்­வி­யங்காட்­டில் கொல்­லப்­பட்ட இந்­திய இரா­ணு­வத்­தி­ன­ரின் நினை­வாக அமைக்­கப்­பட்ட தூபி­யி­லேயே அதி­கா­ரி­கள் அஞ்­சலி செலுத்­த­வுள்­ள­னர்.

1987 முதல் 1989 வரை­யான காலத்­தில் அமைதி காப்­புப் படை­யாக வந்­தது இந்­திய இரா­ணு­வம். பின்­னர் ஆக்­கி­ர­மிப்­புப் படை­யாக மாறி­யது. சொல்­லொ­ணாக் கொடு­மை­களை இழைத்­தது. பெண்­கள் வன்­பு­ன­ரப்­பட்­ட­னர்; அப்­பா­வி­கள் பலர் கொல்­லப்­பட்­ட­னர்.

இந்­தக் காலப் பகு­தி­யில் ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட இந்­திய இராணு­ வத்­தி­னர் விடு­த­லைப் புலி­க­ளின் தாக்­கு­தல்­க­ளில் கொல்­லப்­பட்­ட­னர்.

அவ்­வாறு கொல்­லப்­பட்ட இந்­திய இரா­ணு­வத்­தி­னர் சில­ருக்கு கல் வி­யங்­காடு இராச பாதை­யில் பிடா­ரித் தோட்­டம் பகு­தி­யில் சிறிய நினை­ வுத் தூபி ஒன்று கட்­டப்­பட்­டுள்­ளது. தனி­யா­ருக்­குச் சொந்­த­மான காணி ஒன்­றி­லேயே அனு­மதி இன்றி அந்­தத் தூபி அமைக்­கப்­பட்­டுள் ளது.

இப்­போது அந்­தத் தூபி­யைத் தேடிக் கண்­ட­றிந்­துள்ள இந்­திய இரா ணு­வத்­தி­னர் அதில் அஞ்­சலி செலுத்­த­வுள்­ள­னர். இதற்­காக அந்த இடத்­தைத் துப்­பு­ரவு செய்­யும் ஏற்­பா­டு­கள் இலங்கை இரா­ணு­வத் தி­ன­ரால் முன்­னெ­டுக்­கப்­பட்­டது.
17 ஆண்­டு­க­ளின் பின்­னர் அந்­தத் தூபி­யைச் சுற்றி பகுதி துப்­பு­ரவு செய்­யப்­ப­டு­கி­றது.

பலாலி இரா­ணுவ முகா­மி­லி­ருந்து கல்­லறை அமைந்­துள்ள இடத்­துக்கு நேற்று வந்த இரா­ணு­வத்­தி­னர் 4 பேர், காணி உரி­மை­யா­ள­ரு­டன் கலந்­து­ரை­யா­டி­னர். இந்­திய இரா­ணுவ உயர் அதி­கா­ரி­கள் வர­வுள்­ள­னர், எனவே இந்த இடத்­தைத் துப்­பு­ரவு செய்­ய­வுள்­ளோம் என்று கூறி­யுள்­ள­னர்.

இந்­திய இரா­ணு­வத்­தின் அதி­கா­ரி­கள் குழு இரு நாள் பய­ண­மாக இலங்­கைக்கு வருகை தர­வுள்­ளது. நாளை மறு­தி­னம் சனிக் கிழமை கொழும்­புக்கு வரும் இந்­தக் குழு ஞாயிற்­றுக் கிழமை மாலையே இலங்­கை­யி­லி­ருந்து புறப்­ப­ட­வுள்­ளது.

இந்­திய இரா­ணு­வத்­தி­னர் தமி­ழர் தாய­கத்தை ஆக்­கி­ர­மித்­தி­ருந்த காலப் பகு­தி­யில் அப்­பா­விப் பொது­மக்­கள் பலர், இந்­திய இரா­ணு­வத்­தால் படு­கொலை செய்­யப்­பட்­டி­ருந்­த­னர். கடத்­தப்­பட்டு காணா­மல் ஆக்­கப்­பட்­டி­ருந்­த­னர்.

கொல்­லப்­பட்ட பொது­மக்­கள் நினை­வாக பகி­ரங்­க­மாக எந்­த­வொரு அஞ்­சலி நிகழ்­வு­க­ளை­யும் எந்­தத் தரப்­புக்­க­ளும் ஏற்­பாடு செய்­வ­தில்லை என்று பொது­மக்­கள் மத்­தி­யில் கடும் விச­னம் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இந்­திய இரா­ணு­வத்­தி­ன­ரால் மிலேச்­ச­த­ன­மாக கொல்­லப்­பட்ட யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­மனை ஊழி­யர்­க­ளுக்கு மாத்­தி­ரமே, மருத்­து­வ­மனை நிர்­வா­கம் அஞ்­சலி செலுத்தி வரு­கி­றது.

Previous Post

மகிந்தவின் உறவுகளிடமிருந்து 30 மில்லியன் டொலர் சொத்துக்கள் பறிமுதல்

Next Post

கிழக்­கில் மருத்­து­வ­மனை மறு­சீ­ர­மைப்பு 1.5 கோடி ஒதுக்­கீடு

Next Post
கிழக்­கில்   மருத்­து­வ­மனை  மறு­சீ­ர­மைப்பு  1.5 கோடி ஒதுக்­கீடு

கிழக்­கில் மருத்­து­வ­மனை மறு­சீ­ர­மைப்பு 1.5 கோடி ஒதுக்­கீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures