பிரான்சின் 40 மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தோம். தற்போது கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி, 150 கிலோமீட்டர்கள் வேகம் வரை புயல் வீசுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரான்சின் அனைத்து வடக்கு மாவட்டங்களுக்கும் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்லாண்டிக் கடற்கரையில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக இந்த Carmen புயல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Corsica பிரெஞ்சுத் தீவிலும் மிக மோசமாக புயல் வீசி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர, தற்போது பாதிப்புக்குள்ளாகியுள்ள மாவட்டங்களில் அதிகபட்ச புயல் வேகமாக (கடந்த வருடத்தில்) 136 கி.மீ வேகம் பதிவாகியிருந்தது. ஆனால் தற்போது அதிகபட்சமாக 150 கி.மீ வேகம் வரை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வீசிவரும் கடும் புயலினால் Brittany இல், இன்று திங்கட்கிழமை முதல் 30,000 வீடுகளுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளது. அதேவேளை கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.