15 வயதான சிறுமி ஒருவர், இணையத் தளம் ஊடாக விளம்பரப்படுத்தப்பட்டு விற்பனை செய்த விவகாரத்தில், குறித்த சிறுமியை பணம் கொடுத்து பெற்று பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில், பிரபல இருதய சத்திர சிகிச்சை நிபுணரான வைத்தியர் லெப்டினன் கொமாண்டர் இந்திக திமுத்து டி சில்வா பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்ப்ட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த வைத்திய நிபுணர் கடற்படை வைத்திய சேவையில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக கடற்படை அரிவித்துள்ளது.
கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரால் நிஷாந்த உலுகேதென்னவின் உத்தரவுக்கு அமைய, குறித்த வைத்தியர் இவ்வாறு பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா கூறினார்.
வெலிசறை கடற்படை வைத்தியசாலை, ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை , இரத்மலானை மற்றும் கொத்தலாவலை பாதுகாப்பு கல்லூரி வைத்தியசாலை ஆகியவற்றில் கடமையாற்றும் 41 வயதான குறித்த வைத்தியர், கைது செய்யப்படும் போது வெலிசறை கடற்படை வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியராகவே பதவி வகித்து வந்தார்.
இந்நிலையிலேயே அவர் நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் லோச்சனீ அபேவிக்ரம முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார்.
இதன்போது அவரை எதிர்வரும் 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் லோச்சனீ அபேவிக்ரம உத்தரவிட்டார்.
இவ்வாறான நிலையில் குறித்த வைத்தியரை பணியிலிருந்து இடை நிறுத்தியுள்ள கடற்படை அவருக்கு எதிராக கடற்படை விசாரணைகளையும் ஆரம்பிக்கவுள்ளது.
http://Facebook page / easy 24 news