Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வடக்கில் புலம்பெயர் தமிழரின் அழகிய பண்ணைத் தோட்டம்

February 26, 2023
in News
0
வடக்கில் புலம்பெயர் தமிழரின் அழகிய பண்ணைத் தோட்டம்

வட பகுதி யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் இயக்கச்சி எனும் இடத்தில் ReeCha எனும் பெரிய பண்ணை ஒன்றை எமது
புலம் பெயர் தமிழர் ஒருவர் உருவாக்கியிருக்கிறார்.

150 ஏக்கர் நிலப்பரப்பில் இதை அமைத்திருக்கிறார். இயற்கையாகவே இயற்கையில் நாட்டமுள்ள எனக்கு இந்த பண்ணையை பார்க்கும் சந்தர்ப்பம் ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை கிடைத்தது.

இங்கே பலவிதமான பயன் தரும் மரங்களும், பலவகையான உயிரினங்களாகிய ஆடு, மாடு,கோழி, பன்றிகள், வாத்துக்கள், முயல்கள் போன்றனவும் வளர்க்கப்படுகின்றன.

வடபகுதியில் உள்ள இந்தப் பண்ணையினை மிகவும் அழகாகவும்,நேர்த்தியாகவும் பராமரிக்கிறார்கள்.
150 ஏக்கரையும் முழுமையாக பயன்படுத்துகிறார்கள்.

உள்ளே பண்ணைக்குரிய அடையாளங்களைத் தவிர சிறுவர்களை உற்சாகப்படுத்தும், மகிழ்வூட்டும் பலவகையான பொழுது போக்கு அம்சங்களும் நிறைந்திருக்கின்றன.

Adventure rides, Roller coasters, fun rides,boat rides போன்றன காணப்படுகின்றன. இங்கே குழந்தைகள் மட்டும் அல்ல இறுக்கமான சமூக அமைப்பைக் கொண்ட எமது சமூகத்தில் உள்ள வயது வந்தவர்களும் தங்களை் மறந்து தங்களுக்குள் இருந்த குழந்தைத்தனத்துடன் சிரித்துக் கொண்டிருந்ததை பார்த்த போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

எம்மவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதில் அதிக அக்கறை காட்டும் எனக்கு இது மிகவும் சந்தோஷத்தை அளித்தது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. கோயில்களுக்கு பணம் வழங்கி கோயில்களை ஹோட்டேல்
ஆக்குவபவர்கள் மத்தியிலும், மக்களுக்கு பணம் வழங்கி அவர்களை அடிமைகளாகவும், சோம்பேறிகளாகவும் உருவாக்கும் மக்கள் மத்தியில் இந்த பண்ணையின் உரிமையாளர் எனக்கு அதிசயப் பிறவியாக தெரிந்தார்.
கிட்டத்தட்ட 200 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கியிருக்கிறார்.

தாயக நிலத்தை சரியான முறையில் பயன்படுத்துகிறார். இதன்மூலம் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறார்.
Organic விளைச்சல்களை ஊக்குவிப்பதுடன் Organic பொருட்களை பெறக்கூடிய வாய்ப்பையும் அளிக்கிறார்.

மற்றவர்களை சந்தோஷப்டுத்துகிறார் போன்றவற்றிற்காக இவரது முயற்சிக்கு பெரியதொரு பாராட்டை தெரிவித்தே ஆகவேண்டும். இப்படி சமூகமாக முன்னேற்றுபவர்களை ஆதரிப்போம்.உற்சாகப்படுத்துவோம்.

-கலைச்செல்வி

Previous Post

குமரி மாவட்டத்தின் தக்ஸ் | திரைவிமர்சனம்

Next Post

கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் அமைதியின்மை ! 20 பேர் வைத்தியசாலையில்

Next Post
கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் அமைதியின்மை ! 20 பேர் வைத்தியசாலையில்

கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் அமைதியின்மை ! 20 பேர் வைத்தியசாலையில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures