கப்பலில் இருந்து மீட்கப்பட்டோருக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் வியட்நாமிலே தங்கியிருக்க விரும்புவதாக அந் நாட்டு இராணுவ அதிகாரி தெரிவிப்பு
கப்பலில் இருந்து மீட்கப்பட்டு மியன்மாரில் தக்கவைக்கப்பட்டுள்ள 303 இலங்கை அகதிகளை வியட்நாமின் பொலிஸ் கேணல் அதிகாரி டிரான் வான் பார்வையிட்டதுடன் வியட்நாம் அரசு மற்றும் செயல்பாட்டு முகமைகள் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்யும் என தெரிவித்துள்ளார்.
இங்கு தங்குவதற்கு வசதியாக இருப்பதாக இலங்கையர்கள் கூறுகின்றனர், குறிப்பாக காலை சுவையான உணவு குழந்தைகள் சிறுவர்களுக்கு பால் மற்றும் தேவையான பொருட்களை வழங்குவதுடன் தன்னார்வலர்கள் குழு வருகைதந்துள்ளது.
அதிகாரிகளும் செயல்பாட்டுத் துறைகளும் அவர்களுக்காக தங்கியை பகுதியயை சுத்தம் செய்ய ஆட்களை அனுப்பியுள்ளனர். குளிக்க, மலசலகூட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன
இது இவ்வாறு இருக்க இலங்கையர் ஒருவர் சிகரெட்டும் வாங்கும் படமொன்றை வியட்நாம் TouTre newspaper வெளியிட்டுள்ளது
இவர்களுக்கான உதவிகளை வியட்நாமில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் ஒழுக்கமைப்பை மேற்கொண்டு வருகின்றனர்.