கடந்த வருடத்தில் (2017) இருதய நோய் உட்பட தொற்றாத நோய்களினால் இலங்கையில் ஒரு லட்சத்து 37 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
தவறான வாழ்க்கைப் பழக்கங்கள், உடற்பயிற்சி இன்மை என்பன இவ்வாறான தொற்றாத நோய்களுக்கு காரணமாகும் எனவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த உயிராபத்திலிருந்து காப்பதற்கு சமுக சிந்தனை மாற்றமொன்று கட்டியெழுப்பப்பட வேண்டும் எனவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.