136 படகுகள் கரை திரும்பி கொண்டிருக்கின்றன என்று குமரி மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்துள்ளார். மீனவர்கள் மாயம் குறித்து குமரி மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்தார். கடலுக்கு சென்ற 80 படகுகள் குறித்து தகவல்கள் தெரியவில்லை என்று கூறினார். 430 படகுகள் கரை திரும்பி விட்டன. கடலோர காவல்படையினர் விமானம் மூலம் மீனவர்களை தேடுகின்றனர். கனமழையை சமாளிக்க கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

