13வது திருத்தத்தை அரசமைப்பிலிருந்து நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்தால் அது மிகப்பெரிய தவறாக அமையும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
சண்டே டைம்ஸிற்கு இதனை தெரிவித்துள்ள அவர் 13வது திருத்தம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இரு தரப்பு உடன்படிக்கையை அடிப்படையாக கொண்டது என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை காண்பதற்காகவே இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது என குறிப்பிட்டுள்ள அவர் மாகாணசபைகளுக்கு வழிவகுக்கும் 13 வது திருத்தத்தை ஒழிப்பதற்கு அரசாங்கத்தின் ஒரு பகுதியினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதை அறிவோம்,இது அரசாங்கம் செய்கின்ற பாரிய தவறாக அமையும் என குறிப்பிட்டுள்ளார்.
வடக்குகிழக்கில் நீண்ட காலமாக மாகாண சபைமுறை செயற்படாமலிருந்தது என குறிப்பிட்டுள்ள சுமந்திரன் ஏனையமாகாணங்களில் அந்த முறை நடைமுறையிலிருந்தது என தெரிவித்துள்ளார்.
ஏனையமாகாணங்களில் மாகாணசபை முறைகை;கு எதிராக குரல்கள் ஒலிக்கவில்லை 13வது திருத்தத்தையும் மாகாணசபைமுறையையும் இல்லாமல் செய்யும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை நாங்கள் முழுமையாக எதிர்ப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

