பாராளுமன்றம் எதிர்வரும் 11 ஆம் திகதி 11.30மணிக்கு கூடுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.
பிரதமரின் கோரிக்கைக்கிணங்க நிலையியற் கட்டளை இலக்கம் 16 க்கு அமைவாக கூடவுள்ள குறித்த அமர்வில் சகல பாராளுமன்ற உறுப்பினர்களையும் கலந்துகொள்ளுமாறும் சபாநாயகர் கோரிக்கை விடுத்துள்ளார்.

