வெளிநாடுகளுக்கான புதிய உயர் ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் 10 பேர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதன்படி பின்வருவோர் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன் அடிப்படையில், நோர்வேயிற்கான தூதுவராக பேராசிரியர் அரூஷா குரேயும், ரஷ்யாவுக்கான தூதுவராக கலாநிதி தயான் ஜயதிலக்கவும், பிரேசிலுக்கான தூதுவராக எம்.எம். ஜபீரும், கனடாவுக்கான தூதுவராக எம்.ஏ.கே. கிரிஹாகமவும், போலாந்துக்கான தூதுவராக கனேகம ஆராச்சியும், வியட்நாமுக்கான தூதுவராக எஸ்.எஸ். பிரேமவர்தனவும், தென் ஆபிரிக்காவுக்கான தூதுவராக அனுருத்த குமார மல்லிமாராச்சியும், இந்தியாவுக்கான உயர் ஸ்தானிகராக ஒஸ்டின் பெர்னாண்டோவும், பாகிஸ்தானுக்கான தூதுவராக நூர்தீன் மொஹமட் ஷஹீடும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

