ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேலும் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிரணிக்குத் இன்று செல்லவுள்ளதாக அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசநாயக்க தெரிவித்துள்ளார்.
“கூட்டு அரசாங்கத்தை விட்டு வெளியேறிய 16 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், வரும் 8ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும் போது, எதிர்க்கட்சி வரிசையில் அமரவுள்ளனர்” என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், “நாங்கள் யாரும் அமைச்சர் பதவிகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை அமைப்பதே எமக்கு நோக்கம். நாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து அரசாங்கத்துக்கு எதிராக பிரசாரம் செய்வோம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, “இன்று மேலும் 10 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சிக்கு வரவுள்ளனர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.