10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
இந்தியா – ஜிம்பாப்வே இடையேயான இரண்டாவது 20 ஒவர் போட்டியில், இந்தியா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி வெற்றிப்பெற்றது.
இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை 1-1 என இந்தியா சமன் செய்துள்ளது.
ஹராரேவில் இன்று தொடங்கிய போட்டியில், ஜிம்பாப்வே அணி நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன் படி முதலில் துடுப்பாடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 99 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜிம்பாப்வே வீரர் பீட்டர் மூர் 31 ஓட்டங்கள் எடுத்தார்.
இந்திய அணி தரப்பில் குல்கர்னி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
100 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 13.1 ஒவரில் விக்கெட் இழப்பின்றி 103 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் மன்தீப் சிங் 52* ஓட்டங்களும், லோகேஷ் ராகுல் 47* ஓட்டங்களும் குவித்தனர்.
இதன் மூலம் 20 ஒவர் தொடர்1-1 என சம நிலையை எட்டியுள்ளது. எதிர்வரும் ஜூன் 22ம் திகதி நடக்கும் கடைசி மற்றும் மூன்றாவது 20 ஒவர் போட்டியில் வெற்றிப்பெறும் அணியே தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.