மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் முதற்கட்டத்துக்கு, 1 பில்லியன் டொலர் கடன் வழங்க சீனா இணக்கம் தெரிவித்துள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகள் நடத்தப்பட்ட பேச்சுக்களையடுத்தே இத்திட்டத்திற்கு சீனாவின் எக்சிம் வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக கடந்த வாரம் சீனாவில், திறைசேரியின் வெளியக வளங்கள் திணைக்கள அதிகாரிகள் நடத்திய பேச்சுக்களை அடுத்து, சீன எக்சிம் வங்கிக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில், புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது.
ஐ.தே.க. அரசாங்கம் பதவிக்கு வந்ததன் பின்னர், கடுவத்த தொடக்கம் மிரிகம வரையான 37 கி.மீ பகுதிக்காக அதிவேக நெடுஞ்சாலையை அமைப்பதற்கு 2015ஆம் ஆண்டு சீனாவின் எக்சிம் வங்கியுடன் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
எனினும் இலங்கையின் நிதி நிலைமை, அரசியல் பிரச்சினைகள், மற்றும் பல்வேறு திட்டங்களுக்குப் பயன்படுத்துவதற்கான நிதிகள் தொடர்பான மோசமான அறிக்கைகளால், இந்தக் கடனுக்கு அனுமதி அளிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.