மலேசியாவில் இருந்து கடத்தப்பட்ட 1 கோடி ரூபா மதிப்புள்ள போதை பொருளை திருச்சி விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மலேசியாவில் இருந்து திருச்சி செல்லும் மலிண்டோ விமானத்தில் போதை பொருள் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.