கடந்த ஜனவரி 01 ஆம் திகதி முதல் இம்மாதம் 17 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் 05 கைக்குண்டு, ரி56 ரக துப்பாக்கிகள் 02 மற்றும் அதற்கான 151 ரவைகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேல் மாகாணம் மற்றும் தென் மாகாணங்களில் மேற்கொண்ட சுற்றி வளைப்பிலேயே இவ்வாயுதங்கள், போதைப்பொருள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
மீட்கப்பட்ட ஆயுதங்கள்
கைக்குண்டு – 05
ரி56 ரக துப்பாக்கி – 02
ரி56 ரக துப்பாக்கி மெகசின் – 02
ரி56 ரக துப்பாக்கி ரவைகள் – 151
சுழல் துப்பாக்கி (Revolver) – 05
கைத்துப்பாக்கி (Pistol) – 01
கைத்துப்பாக்கி மெகசின் – 02
வாள் – 07
கைத்துப்பாக்கி, சுழல்துப்பாக்கி ரவைகள் – 385
வேறு துப்பாக்கி ரவைகள் – 810
வெடிமருந்து துப்பாக்கி – 03
இவ்வாயுதங்களுடன், ஹெரோயின் 56 கிராம் மற்றும் ஹசிஸ் எனப்படும் போதைப்பொருள் 111 கிராம் என்பனவும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இச்சுற்றிவளைப்பு சம்பவங்கள் தொடர்பில் 30 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.