வடக்கு சைபீரியாவில், ரஷ்யாவுக்கு சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி கொண்டதில் 18 பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில் ; வடக்கு சைபீரியாவின் க்ராஸ்னோயார்ஸ்க் பிராந்தியத்தில் துருஹன்ஸ் மாவட்டத்தில், 3 ஊழியர்கள் மற்றும் 15 பயணிகளுடன் கிளம்பிய ஹெலிகாப்டர் ஒன்று, ஆயுதங்களுடன் தரையிறங்கிய ஹெலிகாப்டருடன் மோதியது. இதில் முதல் ஹெலிகாப்டரில் இருந்த 18 பேரும் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

