தமிழ் திரையுலகில் நம்பிக்கை அளிக்கும் வகையில் வளர்ந்து வரும் இளம் தலைமுறையைச் சேர்ந்த நடிகர் ஹிர்து ஹாரூன் நடிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு ‘டெக்சாஸ் டைகர்’ என பெயரிடப்பட்டிருக்கிறது.
‘ஃபேமிலி படம்’ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் செல்வா குமார் திருமாறன் இயக்கத்தில் தயாராகும் ‘ டெக்ஸாஸ் டைகர் ‘எனும் திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடிகர் ஹிர்து ஹாரூன் நடிக்கிறார். மேலும் இந்தத் திரைப்படத்தை யுகே ஸ்குவாட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சுஜித்- பாலாஜி குமார் – பார்த்தி குமார் மற்றும் செல்வா குமார் திருமாறன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும், படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
