பாகிஸ்தானில் ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத் என தனது வீட்டுச் சுவரில் எழுதியதற்காக, இளைஞர் ஒருவரை தேசத்துரோக வழக்கில் அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது. பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள நர அமேசி பகுதியைச் சேர்ந்த சஜீத் ஷா என்ற இளைஞர், தனது வீட்டின் வெளிச்சுவரில் ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத் என எழுதிவைத்துள்ளார்.
இதை புகைப்படம் எடுத்த சிலர், அது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, அவர் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
20 வயதான சஜீத் தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்திய திரைப்படங்கள் மற்றும் பாடல்களைப் பார்த்து ஈர்க்கப்பட்டதால் இந்தியாவை பகிரங்கமாக பாராட்டியுள்ளார் எனக் கூறப்படுகிறது.