அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் ரிக்டர் அளவுகோலில் 6.9 புள்ளிகளாக பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஹவாய் தீவுகளில் சமீப நாட்களில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டதால், அங்குள்ள கீலவேயா எரிமலை வெடித்து சிதறியது. அதிலிருந்து எரிமலை குழம்பு வெளிபட்டு வருவதால், அதன் அருகில் வசித்து வந்த 1500க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில், இந்த எரிமலைக்கு அருகில் நேற்று முன்தினம் பகல் 12.32 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவு கோலில் இது 6.9 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. மேலும், பூமிக்கடியில் 5 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 1975ம் ஆண்டில் ரிக்டர் அளவுகோலில் 7.1 புள்ளிகளாக நிலநடுக்கம் ஏற்பட்ட அதே பகுதியில்தான், இப்போது இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பாதிப்புகள் ஏற்பட்டதாக தகவல் இல்லை.