ஹமில்டன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில், நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து, குவாக்கர் கிரெஸெண்ட் அருகே குயின் விக்டோரியா டிரைவ் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, ‘இரு இளைஞர்கள் சண்டையிட்டதன் பின்னர், அதில் ஒரு இளைஞன், மேலும் இருவரை காரில் ஏற்றி சென்றுக் கொண்டிருந்த போதே, இவ் விபத்து சம்பவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த விபத்தின் போது, சிறிய காயங்களுக்குள்ளான ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட நால்வரில், 17 வயதான மூவரும், 15 வயதான ஒருவரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

