ஹபரணை- தும்பிகுளம் வனப்பகுதியில் திடீர் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
குறித்த பகுதியில் இதுவரை 7 யானைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இந்நிலையிலேயே நேற்று மாலை இராணுவம், பொலிஸார் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், தேடுதல் நடவடிக்கைகள், இன்றும் முன்னெடுக்கப்படலாமென சிகிரிய வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

