ஜப்பானை வார இறுதியில் மிக மோசமாக தாக்கிய ஹகிபிஸ் புயலுக்கு இதுவரை 66 பேர் பலியாகி 20 பேருக்கு மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளனர்.
மணிக்கு 180 கிலோமீற்றர் வேகத்தில் வீசிய இந்தப்புயல் கடந்த 60 ஆண்டுகளில் ஜப்பான் கண்டுகொள்ளாத அளவுக்கு மிகமோசமான பாதிப்பை அங்கு ஏற்படுத்தியது.
புயல்காரணமாக பெய்த பெருமழையால் 25ற்கும் மேற்பட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் உலக புகழ்ப்பெற்ற ஜப்பானின்
அதிவேக ரயில்கள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
ஜப்பானின் பிரதான தீவின் கிழக்கு கடற்கரையில் 270,000ற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது.
தற்போது இடம்பெறும் மீட்புப் பணிகளில் ஜப்பானித் துருப்புகளும் மீட்புதவி படையணிகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

