ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணியில் சேர்ந்திருப்பதா? இல்லையா? என்பது குறித்து நாளை மறுதினம் நடைபெறவுள்ள ஸ்ரீ ல.சு.க.யின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என அரசாங்கத்திலிருந்து விலகிய அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திமவீரக்கொடி தெரிவித்துள்ளார்.
கட்சியின் பதவி நிலைமைகள் தொடர்பிலும் அன்றைய தினம் முக்கிய தீர்மானங்கள் எட்டப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத ஸ்ரீ ல.சு.க. உறுப்பினர்களுக்கும், அரசாங்கத்திலிருந்து வெளியேறிய அக்கட்சியின் 16 உறுப்பினர்களுக்கும் இடையே பாரிய பணிப்போர் ஒன்று இடம்பெற்று வரும் நிலையில் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

