ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவி மீண்டும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் மைத்திரிபால சிறிசேன கட்சியின் தலைமையிலிருந்து ஒதுங்கி சுயாதீனமாக செயற்படத் தீர்மானித்திருந்தார். இதனால் கட்சியின் தலைமைப் பதவி தற்காலிகமாக பேராசிரியர் ரோஹண லக்ஸ்மன் பியதாசவிடம் ஒப்படைக்கப்பட்டது.
நேற்று முன்தினம் (18) இடம்பெற்ற கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் வைத்து மீண்டும் தலைமைப் பதவியை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்க தீர்மானித்தாக பேராசிரியர் ரோஹண லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

