ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு யாருக்கு என்பது தொடர்பிலான அறிவிப்பு இன்று காலை இடம்பெறுவதற்கான வாய்ப்புள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை அக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலில் எந்தக் கட்சியை ஆதரிப்பது என்பது தொடர்பில் விரிவாக கலந்தாலோசனை செய்யப்பட்டுள்ளது. இறுதியில், தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்குவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு தீர்மானத்தை அறிவிக்கவிருந்த நிலையில், அது ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இன்று (09) அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளதாக எஸ்.பீ. திஸாநாயக்க எம்.பி. நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவித்திருந்தார்.

