Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஸ்ரீ சம்மோஹன கிருஷ்ணன் ஸ்லோகம்

June 7, 2021
in News
0

நிம்மதியற்ற குடும்பங்களில் மனநிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் சக்தி வாய்ந்த ஸ்லோகமாகும். காலையில் நீராடிய பின் மூன்று முறையும் இரவில் உறங்கப் போகுமுன் ஒரு முறையும் சொல்வது அளவற்ற நன்மைகள் தரும்.

உலக மக்களின் நன்மை கருதி மரீசி மகரிஷி நமக்கு அளித்துள்ள அரிய சக்தி வாய்ந்த சம்மோஹன கிருஷ்ண ஸ்லோகம். நிம்மதியற்ற குடும்பங்களில் மனநிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் சக்தி வாய்ந்த ஸ்லோகமாகும்.

காலையில் நீராடிய பின் மூன்று முறையும் இரவில் உறங்கப் போகுமுன் ஒரு முறையும் சொல்வது அளவற்ற நன்மைகள் தரும். முக்கியமாய் திருமணமான பெண்களுக்கு மகிழ்ச்சியான இல்லற வாழ்வை தரும். திருமணமாகாத பெண்களுக்குத் திருமணத் தடைகள் நீங்கி நல்ல வரன் அமையும்.

க்ருஷ்ணம் கமலபத்ராக்ஷம் திவ்யாபரண பூஷிதம்

த்ரிபங்கி லலிதாகாரம் அதிஸுந்தர மோஹனம்
பாகம் தக்ஷிணம் புருஷம் அந்யத் ஸ்திரீ ரூபிணம் ததா
ஸங்கம் சக்ரம் சாங்கு ஸஞ்ச புஷ்பபாணம்ச பங்கஜம்
இஷீசாபம் வேணுவாத்தியம்ச தாரயந்தம் புஜாஷ்டகை:
ஸ்வேத கந்தானு லிப்தாங்கம் புஷ்ப வஸ்த்ர த்ரகுஜ்வலம்
ஸர்வ காமார்த்த சித்யர்த்தம் மோஹனம் க்ருஷ்ண மாஸ்ரயே

பொருள்:

தாமரை இதழ் போன்ற கண்களும் பலவிதமான திருவாபரணங்களைத் தரித்தவரும் அழகிய வில் போல் வளைந்த திருமேனியும் அழகுக்கு அழகு சேர்க்கும் மன்மத ரூபமாகத் திகழ்பவரும் சரிபாதி புருஷாகார சரீரரும் சரிபாதி பெண்மையான சரீரமும் வலது நான்கு இடது நான்கு கைகளில் – சங்கு, சக்கரம், அங்குசம், கரும்புவில், புஷ்பபாணம், தாமரை மலர், இரண்டு கைகளில் வேணுவாத்தியம் (புல்லாங்குழல்) வாசித்தபடி சுகந்த சந்தன திரவியங்களைப் பூசிக் கொண்டும், பலவிதமான மனோகரமான புஷ்பங்களைத் தரித்தவரும் இன்னல்படும் மக்களை அனைத்துத் துன்பங்களிலிருந்தும் காப்பாற்றி இன்பத்தைத் தரவல்லவருமான மோஹனரூபமாக உள்ளத்தை வசீகரிக்கும் ஸ்ரீகிருஷ்ணனைத் தியானிக்கிறேன்.

http://Facebook page / easy 24 news

Previous Post

சகாயமாதாபுரத்தில் மேலும் 22 பேருக்கு கொரோனா

Next Post

நீர் கட்டணம் செலுத்த நிவாரண காலம் – அமைச்சர் வாசு அறிவிப்பு

Next Post

நீர் கட்டணம் செலுத்த நிவாரண காலம் - அமைச்சர் வாசு அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures