ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விசேட மத்திய குழு கூட்டம் இடம்பெறவுள்ளது.
இந்த கூட்டம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்சியின் பதில் தவிசாளர் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாஸ தலைமையில் குறித்த மத்திய குழு கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 16ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார பணிகள் குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் இதன்போது ஆராயப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

