முப்படை வீரர்களின் விளையாட்டுத் திறமைகளை வெளிக்கொண்டு வரும் பாதுகாப்புச் சேவைகள் விளையாட்டு நிகழ்வுகள் புதன்கிழமை (2022 ஒக்டோபர் 19ஆம் திகதி ) பனாகொட இராணுவ உள்ளக அரங்கில் விமர்சையாக ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமால் குணரத்ன கலந்துகொண்டார்.
மேலும், பாதுகாப்புப் படை பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுக்குழுத் தலைவரும் இலங்கை விமானப்படை தளபதியுமான எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன ஆகியோருடன் இலங்கை இராணுவ மற்றும் கடற்படை தளபதிகளும் விசேட அதிதிகளாக கலந்துகொண்டனர்.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால் பரிந்துரை செய்யப்பட்ட இவ்விளையாட்டு நிகழ்வானது வருடாந்த அட்டவணைப்படி, முக்கியமான ஒரு விளையாட்டாக அறிமுகப்படுத்தப்பட்டது.
இலங்கையில் இடம்பெறும் விளையாட்டுக்களில் முக்கியமான விடயம், பாதுகாப்புச் சேவைகள் விளையாட்டின் மூலம் தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற அனுபவங்கள் இராணுவ கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களுக்கு கிடைக்கப் பெறுகின்றது.

முப்படையில் இராணுவப் பணிகளுக்காக இணைக்கப்படும் வீர, வீராங்கனைகளின் விளையாட்டுத் திறன்களை இனங்கண்டு, அவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காக முப்படை விளையாட்டு சம்மேளனத்தின் மிகப் பெரும் சேவையாகவும், ஒரு வெற்றிகரமான விளையாட்டுத் தொடராகவும் இந்த பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு நிகழ்வுகள் கருத்தில் கொள்ளப்படுகின்றன.
இந்த பாதுகாப்புச் சேவைகள் விளையாட்டின் மூலம் திறன்களை வெளிப்படுத்தி, சர்வதேச ரீதியில் தாய்நாட்டுக்காக இராணுவப்படை சார்பாக 272 பதக்கங்களும், இலங்கை விமானப்படை சார்பாக 40 பதக்கங்களும் இலங்கை கடற்படை சார்பாக 30 பதக்கங்களும் பெற்றுக் கொடுத்துள்ளனர்.
இந்த பாதுகாப்புச் சேவைகள் விளையாட்டுப் போட்டித் தொடரில், 39 விளையாட்டுப் பிரிவுப் போட்டிகள் 2022ஆம் ஆண்டு ஒக்டோபர் 26ஆம் திகதி தொடக்கம் 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இரண்டாம் வாரம் வரை இடம்பெறவுள்ளன.
இதன் ஆரம்ப விழாவில் முப்படை சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட முப்படை சார் விளையாட்டு வீர, வீராங்கனைகளும் பங்குபற்றினர்.




