ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு எதிராக எட்டு கனேடிய பிரஜைகள் முறைப்பாடு செய்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலைய பொலிசாரிடம் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது…
ஸ்ரீலங்கன் விமான சேவையில் பயணிப்பதற்கு ஏற்கனவே டிக்கெட்டுகள் கொள்வனவு செய்யப்பட்ட நிலையில் இன்றையதினம் பயணம் மேற்கொள்ள சென்றபோது அவர்களால் பயணத்தை தொடரமுடியவில்லை.
காரணம் கனேடிய பிரஜைகள் பதிவு செய்த ஆவணம் ஏற்கனே பூரணப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிருப்தி அடைந்த கனேடிய பிரஜைகள் கட்டுநாயக்க விமான நிலைய பொலிசாரிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
அத்துடன் இதுவரை தமக்கான மாற்று நடவடிக்கை மேற்கொள்ள முடியவில்லை என்றும் எப்படி தமக்கு டிக்கெட் விநியோகிக்க முடிந்தது என்றும் பொலிசாரிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.