Tuesday, September 9, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

ஸ்ரீதேவி உடலுக்கு மும்பையில் இன்று இறுதிச்சடங்கு

February 28, 2018
in Cinema, News, Politics, Uncategorized, World
0

துபாய் நகரில் உள்ள ஆர்.ஏ.கே. வால்டார்ப் ஆஸ்டோரியா நட்சத்திர ஓட்டலில் கடந்த 22-ம் தேதி போனி கபூர் உறவினர் மோஹித் மார்வா திருமணம் நடந்தது. அந்த திருமண நிகழ்ச்சியில் ஸ்ரீதேவி தனது கணவர் மற்றும் இளைய மகள் குஷியுடன் கலந்து கொண்டார்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு ஸ்ரீதேவியின் உயிர் மாரடைப்பு காரணமாக பிரிந்ததாக போனி கபூர் தெரிவித்திருந்தார்.

துபாயில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவி, ஓட்டல் அறையின் பாத்ரூமில் உள்ள குளியல் தொட்டியில் மூழ்கியதால் உயிரிழந்ததாக தடயவியல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, அவரது கணவர் போனி கபூரிடம் துபாய் போலீசார் விசாரணை செய்தனர். விசாரணைக்கு பின்னர் ஸ்ரீதேவியின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க துபாய் போலீசார் அனுமதிக்கடிதம் அளித்தது. அனுமதிக்கடிதம் அளித்த பின்னர் அவரது உடல் எம்பால்மிங் செய்வதற்காக வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. சில மணிநேரத்திற்கு பின்னர் எம்பால்மிங் நடவடிக்கைகள் முடிந்ததும் துபாய் விமான நிலையத்திற்கு அவரது உடல் கொண்டுவரப்பட்டது.

அனில் அம்பானிக்கு சொந்தமான சிறிய ரக விமானத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு சுமார் 7.15 மணியளவில் ஸ்ரீதேவியின் உடல் மும்பைக்கு புறப்பட்டது. இந்நிலையில், சுமார் 9.45 மணியளவில் அவரது உடல் மும்பை விமான நிலையம் வந்தடைந்தது. அங்கிருந்து உடல் ஆம்புலன்ஸ் மூலம் அந்தேரி மேற்கு லோகண்ட்வாலா கிரீன் ஏக்கர்ஸ் அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்து வரப்பட்டது.

உடலை பார்த்த ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி, குஷி ஆகியோர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அவர்களை உறவினர்கள் தேற்றினர். ஸ்ரீதேவியின் உடலுக்கு குடும்பத்தினர் சடங்குகளை செய்தனர்.

நடிகை ஸ்ரீதேவியின் உடல் இன்று (புதன்கிழமை) காலை அந்த பகுதியில் உள்ள செலிபிரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப் வளாகத்திற்கு கொண்டுவரப்படுகிறது. அங்கு காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

அங்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினரும் ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள்.

தொடர்ந்து மதியம் 2 மணி அளவில் இறுதி ஊர்வலம் நடக்கிறது. மும்பை வில்லேபார்லே மேற்கு பவன்ஹன்ஸ் அருகே உள்ள மயானத்தில் அவரது உடல் பிற்பகல் 3.30 மணி அளவில் தகனம் செய்யப்படுகிறது.

Previous Post

வடக்கு மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் பிணையில் செல்ல அனுமதி

Next Post

ஸ்ரீதேவி உடல் இந்தியாவர ரூ.70 லட்சத்து 65 ஆயிரம் விமான செலவு

Next Post

ஸ்ரீதேவி உடல் இந்தியாவர ரூ.70 லட்சத்து 65 ஆயிரம் விமான செலவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures