முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ கைது செய்யப்படுவதைத் தடுக்க தலையிடக் கோரி கோரிக்கை விடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை கண்டி மல்வத்து மகா விகாரை மறுத்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மல்வத்து மகா விகாரையிடம் அத்தகைய கோரிக்கையை விடுத்ததாகக் வெளியாகிய செய்திகள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மல்வத்து பீடம் இதனைத் தெரிவித்துள்ளது.
மஹிந்த ராஜபக்ஷவினால் இவ்வாறான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தவறானவை மற்றும் ஆதாரமற்றவை என்று மல்வத்து பீடம் குறிப்பிட்டுள்ளது.
பரப்பப்படும் செய்திகளில் கூறப்பட்டுள்ளதைப் போன்று அத்தகைய சந்திப்பு அல்லது தொலைபேசி உரையாடல் எதுவும் நடக்கவில்லை என்றும் மல்வத்து பீடம் தெரிவித்துள்ளது.
பொது அமைதியின்மையை ஏற்படுத்தும் நோக்கில் இதுபோன்ற தவறான தகவல்களைப் பரப்பும் நபர்கள் அல்லது நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்துவத்து பீடம் எச்சரிக்கை விடுத்துள்ளது.