பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் ஷாருக்கான், ஹாலிவுட் படத்தில் தான் நடிக்கவில்லையே என்கிற மனக்குறை இருப்பதை சமீபத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
இதுவரை தன்னை தேடி ஹாலிவுட் பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை என கூறியுள்ள ஷாருக்கான், ஒருவேளை தன்னுடைய இங்கிலிஷ் சுமாராக இருப்பதுகூட அதற்கு காரணமாக இருக்கலாம் என கூறியுள்ளார். மேலும் தன்னால் ஹாலிவுட் இயக்குனர்களை நோக்கி பார்க்க முடியாது என்றும் அவர்கள் பார்வை தான், தன் மீது பட்டிருக்க வேண்டும் எனவும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இன்னும் ஒரு படி மேலாக சிவாஜி பாணியில், வானத்து நிலவை தினமும் என்னால் பார்க்கத்தான் முடிகிறது. ஆனால் பிடிக்க முடியவில்லையே எனவும் வருத்தப்பட்டுள்ளார்.