இரத்தினபுரியில் கெரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரின் இரத்த மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி வைத்தியசாலையின் பணிப்பாளர் அனோஜ் ருத்திகோ இதனை தெரிவித்துள்ளார்.
சாரதியாக கடமையாற்றி வரும் நபர் ஒருவர் மூச்சுத் திணறல் ஏற்பட்ட காரணத்தால் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, அவரை ஏனைய நோயாளிகள் இருக்குமிடத்திலிருந்து வேறுபடுத்தி வைத்து சிகிச்சையளித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அவரது இரத்த மாதிரிகளை கொழும்பில் பரிசோதனைக்குட்படுத்தி அனுப்பிய பின்பே உறுதியான தீர்மானத்துக்கு வரமுடியுமென அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் 130 பேர் வரையில் உயிரிழந்துள்ளதுடன், 5000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

