கவிஞர் வைரமுத்து பிரம்மாண்டமாக உருவாக்க இருக்கும் நாட்படு தேறல் என்ற தொடரில் விக்ரம் சுகுமாரன் இணைந்து இருக்கிறார்.
தமிழில் பல படங்களுக்கு பாடல் எழுதியவர் கவிஞர் வைரமுத்து. இவர் புதிய பிரம்மாண்ட முயற்சியாக, ‘நாட்படு தேறல்’ என்ற தலைப்பில் தனது வரிகளில் 100 பாடல்களை உருவாக்கி வருகிறார். தற்போது ‘நாட்படு தேறல்’ தொடரில் உருவாகும் பாடல் ஒன்றை மதயானைக்கூட்டம் மற்றும் விரைவில் வெளியாகவுள்ள இராவண கோட்டம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கவுள்ளார்.
இதுகுறித்து இயக்குனர் விக்ரம் சுகுமாரன் கூறுகையில், “நாட்படு தேறல் தொடரில் ஒரு பாடலை இயக்க வாய்ப்பளித்த கவிபேரரசு வைரமுத்து ஐயாவுக்கு நன்றிகள். இது எனக்கு ஒரு பெருமிதமான தருணம்” என்றார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]