வைத்தியர் சாபி சிஹாப்தீனின் வங்கிக் கணக்குகளில் சந்தேகத்திற்கிடமான முறையில் கோடிக் கணக்கில் நிதி கிடைக்கப் பெற்றுள்ளமை குறித்து விசாரணைகள் ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் குருணாகலை மஜிஸ்ட்ரேட் நீதிபதி சம்பத் ஹேவாவசத்திடம் அறிவிப்புச் செய்துள்ளது.
சந்தேக நபரான வைத்தியர் சாபியின் பேரிலும், அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் பேரிலும் காணப்படும் வங்கிக் கணக்குகள் தொடர்பில் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சார்பில் விசாரணைக்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அதிகாரி விஜித பெரேரா நீதிமன்றத்திடம் நேற்று தெரிவித்துள்ளார்.
இந்த நிதி வைப்புக்கள் தனியார், அரச மற்றும் ஏனைய நிதி நிறுவனங்களில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

