Thursday, September 4, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் – விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணையும் ‘கட்டா குஸ்தி 2’

September 3, 2025
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் – விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணையும் ‘கட்டா குஸ்தி 2’

விஷ்ணு விஷால் – ஐஸ்வர்ய லட்சுமி நடிப்பில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த திரைப்படம் ‘கட்டா குஸ்தி’.  இதன் இரண்டாம் பாகம் தயாராகிறது என அதற்கான பிரத்யேக காணொளியை வெளியிட்டு படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவாகும் ‘கட்டா குஸ்தி படத்தின் இரண்டாம் பாகத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்ய லட்சுமி, கருணாஸ், முனிஸ்காந்த், காளி வெங்கட்  உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 

கே. எம். பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் டொக்டர் ஐசரி கே . கணேஷ் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இப்படத்திற்கான அறிமுக காணொளி ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இதன் காரணமாகவே இந்த காணொளி வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு வரவேற்பை பெற்றிருக்கிறது. 

இதனிடையே ‘கட்டாகுஸ்தி’ படத்தின் முதல் பாகம் தமிழில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றதால் அதன் இரண்டாம் பாகம் தொடர்பான எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது என்பதும், கணவனும் மனைவியும் சேர்ந்து இருப்பதால் ஏற்படும் பிரச்சனைகளை இரண்டாம் பாகம் கொமர்ஷல் அம்சங்களுடன் விவரிக்கப்படலாம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.‌

Previous Post

டிசம்பரில் வெளியாகும் நடிகர் கிச்சா சுதீப்பின் ‘மார்க்’

Next Post

விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

Next Post
விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures