20தெற்கு வேல்ஸில் அடை மழை பெய்து வருவதன் காரணமாக, அங்கு வெள்ள அபாயம் ஏற்படக்கூடிய நிலைமை காணப்படுவதாக, பிரித்தானியாவின் வானிலை நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வேல்ஸில் இன்று (சனிக்கிழமை) அடை மழை பெய்துவருவதுடன், அப்பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இன்று முதல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலைவரை அங்குள்ள மக்களைப் பாதுகாப்பாக இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மழை காரணமாக வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் வெள்ளம் உட்புகக்கூடிய நிலைமை காணப்படுவதாகவும், அந்நிலையம் கூறியுள்ளது.
