Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வேலையற்ற பட்டதாரிகளால் கவனயீர்ப்பு

February 9, 2020
in News, Politics, World
0
வேலையற்ற பட்டதாரிகளால் கவனயீர்ப்பு

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகளால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

காந்தி பூங்கா முன்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஊர்வலமாக பேரணியாக சென்ற வேலையற்ற பட்டதாரிகள், மணிக்கூடு கோபுரம் ஊடாக சென்று மீண்டும் காந்திபூங்காவினை வந்தடைந்து, அங்கு கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

பொதுத்தேர்தலுக்கு முன்பாக வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்க கோரியும் பட்டதாரிகள் நியமன வயதெல்லையினை 35க்கு மேல் உயர்த்துமாறு கோரியுமே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

‘உயர்த்து உயர்த்து வயதெல்லையினை உயர்த்து’, ‘வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேதனையினை கொடுக்காதே’, ‘பிரிவினையின்றி நியமனம் வழங்கு’, ‘பொதுத்தேர்தலுக்கு முன்பாக நியமனங்களை வழங்கு’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் கே.அனிதன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பெருமளவான பட்டதாரிகள் கலந்துகொண்டனர்.

கடந்த மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் 45வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பிரிவினைகள் இல்லாமலும் நியமனங்கள் வழங்கப்பட்ட நிலையில், கடந்த ஆட்சிக்காலத்தில் பல்வேறு வகைகளிலும் நியமனங்கள் புறக்கணிக்கப்பட்டதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், இன்று வயதெல்லையினை 35வயதாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதன் மூலம் பல பட்டதாரிகள் வேலைவாய்ப்பினை பெறும் நிலையில்லாமல் போகும் நிலையுள்ளதாகவும் இங்கு பட்டதாரிகள் சுட்டிக்காட்டினர்.

வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், அந்த நியமனங்கள் தேர்தலுக்கு முன்பாக வழங்கப்பட வேண்டும்.

அவ்வாறு வழங்கப்படாவிட்டால் மட்டக்களப்பு மாவட்டம் உட்பட நாட்டின் அனைத்து பாகங்களிலும் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலையேற்படும் எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தார்.

Previous Post

அவுஸ்திரேலியாவின் கிழக்கு கரையோர மாநிலங்களில் கனமழை

Next Post

இந்தியாவின் உதவி இல்லாமல் 2009 ஆண்டு யுத்தத்தை நிறைவு செய்திருக்க முடியாது

Next Post

இந்தியாவின் உதவி இல்லாமல் 2009 ஆண்டு யுத்தத்தை நிறைவு செய்திருக்க முடியாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures