நான் வேலைப் பளு காரணமாக ஜெனிவா செல்லவில்லை. எமது உறுப்பினர்கள் அனைத்து விடயங்களையும் அங்கு எடுத்துரைப்பர் என்று தெரிவித்தார் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.
கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகர் பகுதியில் மூத்தோர் சங்கக் கட்ட
டம் வடமாகாண முதலமைச்சரா நேற்றுத் திறக்கப்பட்டது. நிகழ்வின் பின்னர் செய்தியாளர்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“வேலைப்பளு காரணமாக நான் ஜெனிவாவுக்குச் செல்லவில்லை. எங்கள் உறுப்பினர்கள் அனைத்து விடயங்கைளயும் அங்கு எடுத்துரைப்பார்கள். அனந்தி சசிதரன், சிவாஜிலிங்கம் ஆகியோர் ஜெனீவாவுக்குச் சென்றிருக்கின்றார்கள். வேறு யார் யார் செல்கின்றார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை.”-என்றார்.